மயிலாடுதுறை, ஆக.11 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி ஒன்றியத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராடியதால் காவல்துறையால் புனையப் பட்ட பொய் வழக்கிலிருந்து மாணவர் சங்க தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
2018 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவ தும் பல்வேறு இடங்களில் இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில் போராட்டங்கள் நடைபெற்றன. தரங்கம்பாடி ஒன்றியத் தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய மாண வர் சங்க தலைவர்கள் மீது காவல்துறை பொய் வழக்குப் பதிந் தது. இதுகுறித்து நீண்ட காலமாக தரங்கம்பாடி நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இது பொய் வழக்கு என நிரூபிக்கப்பட்டு, வழக்கிலிருந்து இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் அமுல்காஸ்ட்ரோ மற்றும் சக்திவேல், ரஞ்சித், உதயா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்